உள்நாடுசூடான செய்திகள் 1

பெளசியின் எம்பி பதவியை கோரி முஜூபுர் ரஹ்மான் நீதிமன்றை நாடுகின்றார்!

(UTV | கொழும்பு) –

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முஜூபுர் ரஹ்மான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாவிட்டால் தாம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஜூபுர் ரஹ்மான், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து தனது வழக்கறிஞர்களுடன் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தான் சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் சம்பளத்தை மீள வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அவ்வாறாயின் அவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அது தொடர்பான சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டுமென முஜூபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும், முஜூபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் பின்னர், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஏ.எச்.எம்.பௌசிக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09)

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்