உள்நாடுசூடான செய்திகள் 1

விரைவில் 13ஆம் திருத்த சட்டம் வருகிறது : யாழில் மனூச

(UTV | கொழும்பு) –

இந்த நாடு இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

யாழில் நேற்று வெள்ளிக்கிழமை (14)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் , பாராளுமன்றில் சரத் வீரசேகர , குருந்தூர் மலை விவாகரம் தொடர்பில், நீதவானை விமர்சித்தமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தில் பல்வேறுபட்ட சிந்தனைகளை கொள்கையுடையவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். இந்த நாடு இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தம். அனைவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு.

எவர் என்ன சொன்னாலும் ஜனாதிபதி நாட்டில் ஒற்றுமை சமாதானத்தை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றார்.

ஐனாதிபதி 13ஆம் திருத்த சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றார். அதற்காக தமிழ் அரசியல்வாதிகளுடன் பேசியுள்ளார். விரைவில் 13ஆம் திருத்த சட்டம் , திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மழையுடன் கூடிய வானிலை

பாடசாலை நிகழ்வுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”