(UTV | கொழும்பு) –
தாதியர் ஆட்சேர்ப்பின்போது கலைப் பிரிவு படித்தவர்களையும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
இதேவேளை, மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் எனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்துப் பொருட்களினதும் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிததார். சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் இணையத்தளத்தின் ஊடாக அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெறக்கூடிய மொத்த மருந்துகளின் தரவுகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நெட்வொர்க் செயல்முறை வைத்தியசாலைகளுக்கிடையே மருந்துகளை பரிமாறிக்கொள்ள உதவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්