(UTV | கொழும்பு) –
அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி கிடைக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, பொதுச் செலவில் அது நடக்காது எனவும், பாராளுமன்றம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கால அவகாசம் கொடுத்து டிஜிட்டல் மயமாக்கலை அமல்படுத்த எதிர்பார்ப்பதாகவும், குறைபாடுகள் இருப்பின் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலகில் காணப்படும் புதிய போக்குகளை அரசாங்கம் அவதானித்து தேவையான முறைமைகளை தயார் செய்ய வேண்டும் எனவும் அதற்காக கணக்காய்வு சட்டத்தில் புதிய சட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්