உள்நாடுசூடான செய்திகள் 1

அலி சப்ரியின் உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் – சபாநாயகர்

(UTV | கொழும்பு) –    புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரீ ரஹீமின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறித்து இன்றைய தினம் (14.07.2023) தீர்மானிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்கள் மற்றும் தொலைபேசிகள் என்பனவற்றை நாட்டுக்குள் கொண்டு வந்தமை தொடர்பில் அலி சப்ரீ ரஹீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்புரிமையில் ரஹீம் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அலி சப்ரீ ரஹீம் மேற்கொண்ட சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய வேண்டுமென கட்சித் தலைவர்கள் தீர்மானித்தால் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

ஊரடங்கை சட்டத்தை மீறிய 730 பேர் கைது

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்”