உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுன எம்பிகளுக்கு உயர் பதவிகளும், வாகனங்களும் வழங்க திட்டம்

(UTV | கொழும்பு) –

அமைச்சுபதவிகளை கோரும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் உயர் பதவிகுழுவொன்றை உருவாக்க முன்வந்ததாகவும் எனினும் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அதனை நிராகரித்துவிட்டனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

உயர் பதவி குழு என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களை நியமிப்பதுடன் அவர்களிற்கு ஊதியம் வாகனங்கள் போன்றவற்றை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது  எனினும்  பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அமைச்சு பதவிகளே வேண்டும் என பிடிவாதமாக உள்ளனர்.

உத்தேச உயர்பதவி குழு குறித்த கூட்டமொன்றிற்காக அமைச்சு பதவிகளை கோரும் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுத்தபோதிலும் அவர்கள் சமூகமளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையும் இந்த திங்கட்கிழமையும் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர் ஆனால் நாங்கள் செல்லவில்லை என பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் ஊதியங்களுடன் அரசாங்க பதவிகளை வழங்க அரசாங்கம் முன்வந்தது ஆனால் அவற்றையும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

அமைச்சரவையை விஸ்தரிக்க ஜனாதிபதி தயாரில்லை என தெரியவருகின்றது .

இதேவேளை முக்கிய வாக்களிப்பொன்றின் போது அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டனர் எனவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்திய பிரஜை ஒருவர் கைது

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த விசேட சுற்றறிக்கை