(UTV | கொழும்பு) –
சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 எம்.பி.க்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவினால் கட்சி அங்கத்துவம் இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய செயற்குழு கூட்டத்தில் விசாரணை
நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக கட்சி அங்கத்துவம் இடைநிறுத்தப்படுவதற்கான நடவடிக்கை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு, மைத்திரிபால சிரிசேனவுக்கு கடுமையான ஆட்சேபம் வௌியிட்டிருந்தது. அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை ரத்துச் செய்யவும் மறுப்புத் தெரிவித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில் அங்கத்துவம் இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் விசாரணைகளுக்காக தற்போது அழைக்கப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්