(UTV | கொழும்பு) –
பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்திலிருந்து பஸ் ஒன்று ஆற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பஸ் சாரதிக்கு முன்னரும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், விபத்தின்போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளைம் பொலன்னறுவை-மனம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“மனம்பிட்டிய பகுதியில் பாலத்திலிருந்து கீழ் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் இல்லை. மாகாண அதிகார சபையினால் ஏதேனும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒழுங்கற்ற முறையில் இயங்கும் பேருந்துகளுக்கு தற்போது பெருமளவிலான அபராதம் விதிக்கும் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்றிரவு விபத்துக்குள்ளான பேருந்திற்கு எதிர்காலத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும்.FULL : https://youtu.be/KdSX6Xf_fKk
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්