உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !

(UTV | கொழும்பு) –

ஆறு மாதம் முதல், 3 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பான முறைமைகளில் உள்ள முரண்நிலை குறித்து, சுகாதார அமைச்சுடன் நடத்திய கலந்துரையாடலில், உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமது தொழிற்சாலை பணியாளர்கள், உச்சபட்ச செயற்திறனுடன், திரிபோஷா உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றின் மூலம், அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஆறு மாதம் முதல், 3 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பான முறைமைகளில் உள்ள முரண்நிலைக்கு தீர்வு வழங்கப்பட்டால், குழந்தைகளுக்கு, திரிபோஷாவை வழங்க முடியும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத்தின் வாழ்த்து…