உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ் விவகாரம் : சவூதிக்கு நன்றி கூறிய இலங்கை!

(UTV | கொழும்பு) –

சவூதி அரே­பியா அர­சாங்கம் இவ்­வ­ருடம் ஹஜ்ஜை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­த­மைக்கும் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு பாது­காப்­பான அடைக்­கலம் அளித்­த­மைக்கும் இலங்கை அதி­கா­ரிகள் தங்கள் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

இலங்கை ஒரு பெளத்த நாடாகும். 22 மில்­லியன் இலங்கை சனத்­தொ­கையில் முஸ்லிம் சனத்­தொகை சுமார் 10 வீத­மா­ன­தாகும். இலங்­கை­யி­லி­ருந்து இவ்­வ­ருடம் சுமார் 3500 பேர் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­றி­யுள்­ளனர். இதே­வேளை சுமார் 1.9 மில்­லியன் முஸ்­லிம்கள் உல­கெங்­கு­மி­ருந்து ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

‘பாரிய ஹஜ் ஏற்­பா­டு­களை மிக வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்த சவூதி அரே­பி­யாவின் தலை­மைத்­து­வத்­துக்கு நாங்கள் பாராட்­டு­தல்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம்’. என இலங்­கையின் சவூதி அரே­பி­யா­வுக்­கான தூதுவர் பக்கீர் மொஹிதீ அம்சா ‘அரப் நிவ்ஸ்’ பத்­தி­ரி­கைக்கு தெரி­வித்­துள்ளார்.

“சில சவால்கள் உரு­வா­னாலும் அவை ஹஜ் அதி­கா­ரி­களால் சுமு­க­மாக தீர்த்து வைக்­கப்­பட்­டது” எனவும் அவர் கூறினார்.

சுமார் 100 இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அவர்­க­ளது தங்­கு­மிடம் தொடர்பில் சவால்­களை எதிர் கொண்­டனர். இந்­தப்­பி­ரச்­சினை தீர்த்து வைக்­கப்­பட்­டது. சவூதி அதி­கா­ரிகள் அவர்­க­ளுக்கு மாற்று ஏற்­பா­டு­களை வழங்­கி­னார்கள் என்றும் அவர் கூறினார்.

‘சவூதி அதி­கா­ரிகள் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பான நிர்­வாக செயற்­பா­டு­களை இவ்­வ­ருடம் நேர காலத்­து­டனே இலங்கை அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து முன்­னெ­டுத்­தார்கள். இது பாராட்­டத்­தக்­கது’ என ஜித்­தா­வி­லுள்ள இலங்­கையின் கொன்சல் ஜெனரல் பலா அல்ஹிப்ஸி மெளலானா தெரிவித்தார். சவூதி அர­சாங்கம் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை ஜன­வரி மாதத்தில் முன்­கூட்­டியே ஆரம்­பித்­தி­ருந்­தது என்றும் அவர் கூறினார்.- Vidivelli

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிப்பு-மஹிந்த அமரவீர

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்த சம்பந்தன் – மாவை, சுமந்திரனிடம் வெளிப்படுத்தினார்