உள்நாடுவணிகம்

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எலோன் மாஸ்க்

(UTV | கொழும்பு) –

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஜூலை 05 ஆம் திகதி தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் செயலியில் இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமானமானோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

த்ரெட்ஸ் செயலி ட்விட்டரைப் போலவே பயனர் நட்புக் செயலி என்று மெட்டா நிறுவனம் கூறுகிறது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க், “போட்டி நல்லது, மோசடி மோசமானது” என்று கூறியுள்ளார். ஆனால் சட்டப்பூர்வ கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் த்ரெட்ஸ் கருவியை உருவாக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ட்விட்டரின் சட்டத்தரணி, அலெக்ஸ் ஸ்பிரோ, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு புதன்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “அறிவுசார் சொத்து” மோசடியாகவும், சட்டவிரோதமாகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் மிகவும் ரகசியமான தகவல்களை அறிந்த முன்னாள் ட்விட்டர் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணியமர்த்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Official Channel of UTV: https://www.threads.net/@utvhd.lk

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைமை

பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து