உள்நாடுசூடான செய்திகள் 1

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்

(UTV | கொழும்பு) –

நீதியமைச்சர் விஜயதாசவினால் கொண்டுவரப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை உலமாக்களின் ஆலோசனையுடன்  திருத்தி தயா­ரித்த விரிவான அறிக்கையை இன்று  (06) நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்துள்ளதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­தி­ருத்­தங்கள் அடங்­கிய அறிக்­கையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளஸி, ரிஷாத் பதியுதீன், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், கபீர் காசீம், நசீர் அஹமட், எம்.எஸ். தெளபீக், இஷாக் ரஹ்மான், இம்தியாஸ் பாகிர் மாக்கர், எஸ்.எம்.எம். முஷ்சாரப், பைஷல் காசீம், எஸ்.எம். மரைக்கார், மர்ஜான் பழீல், அப்துல் ஹலீம், காதர் மஸ்தான், எச்.எம்.எம் ஹரீஸ், அலி சப்ரி ரஹீம், இம்ரான் மஹ்ரூம் மற்றும் எம். முஷாம்மில் ஆகிய 18 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்­டுள்­ள­தா­கவும் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகிய இரு உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மி­ட­வில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் திருத்தச் சட்டமூலத்தைக் கூர்ந்து ஆராய்கின்ற போது அதில் காணப்படுகின்ற சில பரிந்துரைகளில் குறிப்பாக; திருமண வயது, வலி தொடர்பான சட்டங்கள், பலதார மணம்,காதி நீதிமன்ற முறைமையில் செய்யப்படுகின்ற மாற்றங்கள், காதிகள் நியமனம், திருமணப் பதிவாளர்களின் நியமனம், திருமணப் பதிவு போன்ற இன்னும் பல விடயங்கள் மார்க்க வழிகாட்டலோடு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு சிபா­ரி­சுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மிக நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்த சட்டதிருத்தம் பல கருந்துரையாடல்களுக்கு பின்னர் தற்போது ஜம்மியதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் அனுமதியுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் சட்டமாக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

மேலும், ”காதியாக செயற்படுகின்ற பொறுப்பும் கடமையும் ஆண்களுக்குரியது என மார்க்க வழிகாட்டலின் அடிப்படையில் உள்ளது..” என்ற கருத்தில், பெண்களும் காதிகளாக செயற்பட முடியும் என்ற கருத்தை இணைத்தால் கையொப்பம் இடம் முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரியிருந்த நிலையில், பெண்களை இணைக்கும் கருத்து இவ் ஆவணத்தில் இல்லாத்தால் அவர் ஆவணத்தில் கையொப்படம் இட மறுத்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது – ரணில் விக்ரமசிங்க

ஏப்ரல் 21 தாக்குதல் : அமைச்சரவையில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

நாளைய ஹர்த்தாலுக்கு விஷேட மருத்துவர்கள் சங்கத்தின் ஆதரவு