உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கண்டியில் நூலகத்தை திறப்பு!

(UTV | கொழும்பு) –

இலங்கை பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் மக்களின் சார்பாக இரண்டாவது வீதி நூலகம் (05/07/2023) கண்டியில் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக பர்கியினால் திறந்து வைக்கப்பட்டது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புத்தகங்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது கண்டி மா நகர சபையின் ஆணையாளரும் பாக்கிஸ்தான் நாட்டின் கௌரவ கவுன்சிலர் அப்சல் மரைக்காரும் கலந்து கொண்டார். இந் நுாலகம் கண்டி சிட்டி நிலையத்துக்கு அருகிலுள்ள சஹாஸ் உயனவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பொதுப் பகுதியில் நூலகம் அமைந்துள்ளது.

இந்த நூலகத்தை அனைவரும் இலவசமாக பயன்படுத்தலாம். “வீதி நூலகம் ” என்ற திட்டத்தின் கீழ், ஏற்கனவே கொழும்பு 7ல் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள மைதான பிரதேசத்தில் முன்றலில் பாக்கிஸ்தான் முதலாவது நடமாடும் நுாலகமொன்றை கடந்த ஆண்டு திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நூலகத்தில் கட்டிடம் மற்றும் புத்தகங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நூலகம் ஏனைய நூலகங்களை விட வித்தியாசமானது. “புத்தகம் ஒன்றை வைத்து விட்டு, புத்தகம் ஒன்றை எடுத்தல் ” என்ற அடிப்படையில் இந்நூலகம் செயல்படும். இங்கே நூலகர் என்று யாரும் இல்லை. யாரும் இங்கு வந்து புத்தகங்களைப் படிக்கலாம்.

மேலும், வாசகர்கள் புத்தகங்களை எடுத்துச் செல்லும்போது தங்கள் விருப்பப்படி வேறு புத்தகங்களை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்..

(அஷ்ரப் ஏ சமத்)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெண்ணின் கருப்பையை அகற்றுவது என்பது உணர்வுப்பூர்வமான விடயம் – சம்பிக ரணவக

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கு உடன்படிக்கை