(UDHAYAM, COLOMBO) – வவுனியாவில் தொடரூந்தும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா புதூர் கோவிலுக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற தொடரூந்து கடவையை கடக்க முற்பட்ட உழவியந்திரத்தினை தொடரூந்து மோதியதில் நேற்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்போது உழவியந்திரத்தை செலுத்திய புளியங்குளத்தை சேர்ந்த 19 மற்றும் 21 வயதுகளையுடை இளைஞர்களே பலியாகியுள்ளனர்.
இந்த தொடரூந்து கடவை பாதுகாப்பற்றது என பல தடவைகள் தொடரூந்து திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற போதும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.