உள்நாடுசூடான செய்திகள் 1

முத்துராஜவுக்கு பதிலாக மூன்று பறவைகளை இலங்கைக்கு வழங்கிய தாய்லாந்து!

(UTV | கொழும்பு) –

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்கு, பறவைகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட ‘காசோவரி’ என்ற (Double Wattled Cassowary) மூன்று பறவைகள் புதன்கிழமை (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இரவு 11.10 மணியளவில் மலேஷியா ஏர்லைன்ஸ் MH-179 என்ற விமானம்மூலம் இரண்டு ஆண் காசோவரி பறவைகளும், சுமார் 9 மாதங்களுடைய ஒரு காசோவரி பறவை குஞ்சும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. சுமார் 5 அடி உயரமும் சுமார் 60 கிலோ கிராம் எடையும் கொண்ட மிகவும் வண்ணமயமான இந்த பறவைகளால் பறக்க முடியாது என்பது விசேட இம்சமாகும்.

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் வருகை தந்த காசோவரி பறவைகளை வரவேற்பதற்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் தம்மிகா தசநாயக்க உட்பட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசு முனைகிறது – சட்டத்தரணி சுகாஸ்

பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் இலக்கும்

🛑Beraking News = அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!