(UTV | கொழும்பு) –
இருளில் மூழ்கப் போகும் பிரதான அரச நிறுவனம்
இலங்கை தேசிய தொலைக்காட்சியின் மின்சாரத்தை மின்சார சபை இன்றைய தினம் துண்டிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்த மின்சார வாரியத்தின் ஒப்பந்தத்துடன் தயாரிக்கப்பட்ட கட்டணத் திட்டத்திற்கமைய, தொலைக்காட்சி சேவை தனது பணத்தை செலுத்தாததே இதற்குக் காரணமாகும்.
தற்போது தேசிய தொலைக்காட்சி மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் டபிள்யூ.பி.கனேகலா உரிய மின்கட்டணத்தை செலுத்துவதற்கு பதிலாக மின்சார சபையிடம் அவ்வப்போது சலுகைகளை பெற்றுக்கொண்டு அங்கு தொடர்ந்து மின்சாரத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්