உள்நாடுசூடான செய்திகள் 1

மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்!

(UTV | கொழும்பு) –

நடைமுறையில் உள்ள மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

எரிவாயு விலைகள் குறைக்கப்படும் போது பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் தமது வெதுப்பகங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்குவதாக கூறுகின்றனர். அதன் காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அந்த சந்தர்ப்பங்களில் தெரிவித்தனர்.

இருப்பினும் தற்போது அதற்கான சந்தர்ப்பம்  உருவாகியுள்ளது. மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உணவகங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்கா மற்றும் சீனா உதவி

நுகர்வோர் அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கையில்