உள்நாடுசூடான செய்திகள் 1

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!

(UTV | கொழும்பு) –   நாடாளுமன்றத்தில் நேற்று (01.07.2023) நடைபெற்ற உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, மயந்த திசாநாயக்க, ரோகினி கவிரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகியோர் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனவும் ரிஷாத் பதியுதீன் புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதியாக கலந்துகொண்டதால் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளமுடியவில்லை எனவும் அவரது தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் பொதுஜன பெரமுனவின் தரப்பில் இருந்து மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும்

‘தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ – நாமல்

“2023 வலிமிகுந்ததாக இருக்கும்” : IMF