(UTV | கொழும்பு) –
உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் நடத்தை தொடர்பில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போட்டியில் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு திரும்பும் போது வனிந்து ஹசரங்க தனது மட்டையால் எல்லைக்கு அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இது நடத்தை விதிகளின் முதல் தர மீறல் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு, தகுதிக்குறைவு மதிப்பெண் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ் வருடத்தில் வனிந்து ஹசரங்க செய்த இரண்டாவது குற்றச்செயல் இது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්