உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – சம்பளம் அதிகரிப்பு ?

(UTV | கொழும்பு) –

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அதிபரும் எதிர்பார்த்துள்ளார்.

அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்புடன் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் , 15 இலட்ச அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் கடுமையான நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம்

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம்