உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் நடத்தாமலேயே உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஏற்பாடு – சட்டமூலம் தயார்

(UTV | கொழும்பு) –

தற்போதைக்கு கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது

1987ம் ஆண்டின் 15ம் இலக்க உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான சட்டமூலத்திற்கான திருத்தச் சட்டமாக இந்த நகல் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை இந்தச் சட்டமூலம் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சருக்கு கிடைக்கின்றது

தேர்தல் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தேர்தலை நடத்த முடியாத ஏதேனும் சூழல் ஏற்பட்டால் அதற்குப் பதிலாக குறிப்பிட்ட ஒரு காலம் வரை கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் இந்தச் சட்டமூலம் ஊடாக அமைச்சருக்கு வழங்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம்

புகையிலை உற்பத்தி முழுமையாக குறைவடையும் வாய்ப்பு

ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் ஜனாதிபதியுடன் சந்திப்பு