உள்நாடுசூடான செய்திகள் 1

உணவு தொண்டையில் சிக்கி 1வயது பிள்ளை மரணம்!

(UTV | கொழும்பு) –

பொகவந்தலாவை பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாய்க்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் இச்சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (வயது – 1½) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் மதிய உணவு தயாரித்து குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் போது மேற்படி தாய்க்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் தொண்டையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு சிக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் தாய் நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்

வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு

UPDATE – லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம்