உள்நாடுசூடான செய்திகள் 1

30 ஆம் திகதி விசேட விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் 30 ஆம் திகதியன்று விசேட வங்கி விடுமுறை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கான காலம் ஒன்று அவசியமாக உள்ளதனால், எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் 29ஆம் திகதியன்று ஹஜ் பெருநாள் காரணமாக மூடப்படும் வங்கிகள், 30 ஆம் திகதியும் பின்னர் ஜூலை முதலாம், இரண்டாம் திகதிகளின், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும் பின்னர் பூரணை தினமான ஜூலை 3ஆம் திகதி திங்கட்கிழமையும் மூடப்படவுள்ளன.

இந்த விடுமுறைகளில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்புதான் என்ன?