உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

மன்னார் கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் பசு கரை ஒதுங்கியது.

(UTV | கொழும்பு) –

 

பாம்பன் அடுத்துள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 08 வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் பசு, டால்பின் உள்ளிட்டவகையில் சிக்குகிறது. அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை (22) பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனச்சரகர் மகேந்திரனுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பறவைகள், நாய் உள்ளிட்டவைகள் இறந்த கடல் பசுவின் உடலை சேதபடுத்தாமல் இருக்க கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர். இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆண் கடல் பசு எனவும் அது சுமார் 1500 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார்.

கடற்கரை ஓரம் மீன் வனத்துறையினரின் தடையை மீறி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் படகின் மீது மோதி கடல் பசு இறந்திருக்கலாம் என அப்பகுதியில் மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று பொது மனிப்பு வழங்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புனித நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி