உள்நாடுசூடான செய்திகள் 1

“சஹ்ரானின் வகுப்பில் கலந்துகொண்ட அப்துல்லாவுக்கு விளக்கமறியல்”

(UTV | கொழும்பு) –

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானியாகச்  செயற்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் நடத்திய ஆயுதப் பயிற்சி முகாம் மற்றும் தீவிரவாத விரிவுரைகளில் பங்கேற்றதாக கூறப்படும் நாவல திறந்த பல்கலைக்கழக கணினித்துறை மாணவர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது.

வெலம்பொட பகுதியைச் சேர்ந்த அஜ்முல் ஜாகிர் அப்துல்லா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜூலை 21 மற்றும் 22ஆம் திகதிகளில் ஆயுதப் பயிற்சி முகாம் மற்றும் தீவிரவாத விரிவுரைகளில் இம்மாணவன் பங்குபற்றியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தொலைபேசி பகுப்பாய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்தோடு, சந்தேகத்துக்குரிய மாணவன் தீவிரவாத பயிற்சி முகாமில் பங்குபற்றியதாக விசாரணைகளின் மூலம் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பான பல தகவல்கள் பெறப்பட்டதாகவும் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

தியத்தலாவ விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம்

மாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான அதிவேக வீதியானது திறக்கப்படுகின்றது