உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

(UTV | கொழும்பு) –

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கட்­டா­ய­மாக ஏற்­றிக்­கொள்­ள­வேண்­டிய நோய்த்­த­டுப்­பூசி மருந்து இலங்­கையில் இருப்பில் இல்­லாத நிலையில் குறிப்­பிட்ட நோய்த்­த­டுப்­பூசி மருந்து அதற்­கான விதி­மு­றை­களை மீறி இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­போது சில வைத்­திய நிலை­யங்கள் ஊடாக ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் ஹரித அளுத்கே குற்றம் சுமத்தி உள்ளார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் ‘இந்தத் தடுப்­பூசி ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு கட்­டா­ய­மாகும். சவூதி அரே­பி­யாவில் மக்கா, மதீ­னாவில் யாத்­தி­ரி­கர்கள் ஒன்று கூடும்­போது தோற்­று­நோய்க்­குள்­ளா­காமல் இருப்­ப­தற்கே இத்­த­டுப்­பூசி ஏற்­றிக்­கொள்­ளப்­ப­டு­கி­றது. சவூதி அரே­பி­யாவின் அதி­கா­ரிகள், சர்­வ­தேச சுகா­தார அமைப்­புகள், உலக சுகா­தார ஸ்தாபனம் (WHO) என்­பன ஹஜ் யாத்­திரை மேற்­காள்ளும் ஒவ்­வொ­ரு­வரும் தடுப்­பூசி ஏற்­றிக்­கொள்­ள­வேண்டும் என கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஹஜ் யாத்­திரை வருடம் முழு­வதும் மேற்­கொள்­ளப்­படு வதில்லை. ஒரு குறிப்­பிட்ட காலத்­திலே மேற்­கொள்ளப் படு­கி­றது. ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தடுப்­பூசி ஏற்­றிக்­கொள்­வது கட்­டா­ய­மாகும்.

தற்­போது இந்த தடுப்­பூசி விதி­க­ளுக்கு மாறாக கள்ள வழி­யிலே நாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இந்த தடுப்­பூசி குறிப்­பிட்ட குளி­ரூட்­டப்­பட்ட நிலை­யிலே போக்­கு­வ­ரத்து செய்­யப்­ப­ட­வேண்டும். தடுப்­பூசி ஏற்­றப்­படும் வரை குறிப்­பிட்ட சீதோஷ்ண அளவு பேணப்­ப­ட­வேண்டும்.

ஆனால் இந்த தடுப்­பூ­சிகள் தேவை­யான சீதோஷ்ண அளவு இன்றி பைகளில் எடுத்து வரப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்கப் படு­கி­றது. இது உண்­மை­யென்றால் தடுப்­பூ­சியின் தரம் எவ்­வாறு பேணப்­பட்­டி­ருக்கும்.

இந்­நி­லைமை மிகவும் அபா­ய­க­ர­மா­ன­தாகும். நோயா­ளி­களை அல்­லது தடுப்­பூசி ஏற்­றிக்­கொள்­ப­வர்­களை ஏமாற்­று­வ­தாகும். அத்­தோடு நாட்டின் சட்­டத்தை மீறி­ய­தாகும். அதனால் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் இதன் உண்மை தன்மை என்ன என்­பதை நாட்டு மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

அத்­தோடு ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் வரு­டாந்தம் இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கானோர் ஹஜ் யாத்­திரை செல்­கி­றார்கள். ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கட்­டா­ய­மாக நோய்த்­த­டுப்­பூசி ஏற்றிக் கொண்­டி­ருக்­க­வேண்டும். அதற்­கான ஆவணம் சவூ­தியில் பரீ­சீ­லிக்­கப்­படும்.
இந்­நி­லையில் தற்­போது குறிப்­பிட்ட நோய்த்­த­டுப்­பூசி எதுவும் இலங்­கையில் இருப்பில் இல்லை என்றே ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

என்­றாலும் பதிவு செய்­யப்­ப­டாத தடுப்­பூ­சிகள் தொகை­யொன்று சட்­ட­வி­ரோ­த­மாக தவ­றான வழியில் நாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு நாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்ள தடுப்­பூ­சிகள் சில வைத்­திய நிலை­யங்கள் ஊடாக தேவை­யா­ன­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தா­ரத்­து­றை­யினர் ஹஜ் யாத்­திரை காலத்தில் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­படும் என்­பதை ஏற்­க­னவே தெரிந்து வைத்­தி­ருக்க வேண்டும். இக்­கா­லத்தில் நோய்த்­த­டுப்­பூசி தேவைப்­படும் என்­பதை கவ­னத்தில் கொண்­டி­ருக்­க­வேண்டும்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளையும் மக்­க­ளையும் நோய்த்­தொற்று ஆபத்­தி­லி­ருந்தும் பாது­காப்­பதே இதன் நோக்கம்.

எமது நாட்டின் சுகா­தார அதி­கா­ரிகள் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தேவை­யான குறிப்­பிட்ட தடுப்­பூசி மருந்­தினை திட்­ட­மிட்டு இருப்பில் வைத்­தி­ருப்­பது அவர்­க­ளது பொறுப்­பாகும்.இந்த தடுப்­பூசி மருந்து காலம் முழு­வதும் தேவைப்­ப­டு­வது அல்ல, ஹஜ் யாத்­திரை காலத்­திலே தேவைப்­ப­டு­கி­றது. ஆனால் சுகா­தார அமைச்சு தனது பொறுப்­பி­லி­ருந்தும் தவ­றி­யுள்­ளது. மருந்து மாபி­யா­கா­ரர்­க­ளுக்கு, இந்­நி­லைமை மூலம் சந்­தர்ப்பம் வழங்­கி­யுள்­ளது. இந்த தடுப்­பூசி மருந்து சாதா­ரண மருந்­தல்ல. இல­குவில் இறக்­கு­மதி செய்ய முடி­யாது.

இம்­ம­ருந்து பய­னா­ளிக்கு ஏற்­றப்­ப­டும்­வரை உரிய சீதோ­ஷண நிலை பேணப்படவேண்டும். ஆனால் இந்த நிலைமை பேணப்படாது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் தமது மார்க்க கடமையினை மேற்கொள்வதற்கு தடைகளின்றி சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.இந்நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு அரசாங்கம் மாற்று வழியினை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்விவகாரத்தில் மாற்றுவழி ஏற்பாடு செய்யப்படவேண்டும். சுகாதார அமைச்சு உடனடியாக இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். பதில் வழங்க வேண்டும் என்றார்.- Vidivelli

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காவற்துறை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் பலி

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் இந்தியா

பொலிஸ் பரிசோதகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோருக்கு விளக்கமறியல்