(UTV | கொழும்பு) –
பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் ஒரு திருத்தத்துக்கு உட்பட்டதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (13) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நீண்ட காலத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் வரவுசெலவுதிட்ட அலுவலகத்தை அமைப்பது முக்கியமானது என்றும், வரவுசெலவுத்திட்ட பகுப்பாய்வு செயல்முறைக்குத் தேவையான சுதந்திரத்தை இந்த நடைமுறை உறுதி செய்யும் என்றும் குழுவின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.
பணிப்புரைக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் சுஜித் டி சில்வா தலைமையில் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சனத் குமார தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්