உள்நாடு

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம்!!

(UTV | கொழும்பு) –   புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில் அவருக்கு மூன்று மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷானி அபேசேகரவுக்கிடையில் நடைபெற்றதாக பரவி வரும் குரல் பதிவு [VIDEO]

தேர்தல் நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் ? விசாரணைகள் ஆரம்பம்

editor

பாடசாலை வேன் போக்குவரத்து – அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்