உள்நாடுசூடான செய்திகள் 1

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு என்பது பொய்!

(UTV | கொழும்பு) –

சந்தையில் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவி க்கப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் டொலரின் பெறுமதிக்கு அமைய கோதுமை மாவின் விலை தீர்மானிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, பெரும்பாலான வெதுப்பகங்கள் அதிக விலைக்கே தொடர்ந்தும் பொருட்களை வழங்குவதாக உணவக உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய பதவி ஏற்க வந்தவர் மீது துப்பாக்கி சூடு

குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதியாகும் நடவடிக்கை ஆரம்பம்

சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்