உள்நாடுசூடான செய்திகள் 1

“ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகை : நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை” அமைச்சர் கஞ்சன

(UTV | கொழும்பு) –

அடுத்த வருடம் ஜனவரி மாதம் விசேட மின் கட்டணச் சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, 0 – 30, 30 – 60, 60 – 90 யுனிட்களுக்கு 27% மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்துள்ளோம். மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் எவ்வித எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை (22) 9000 மெட்ரிக் தொன் பெற்றோல் சரக்கு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலோ அல்லது லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலோ ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை.

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 80 – 100 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமானளவு கையிருப்பு காணப்படுவதோடு , முற்பதிவு செய்யப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அவை தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுகின்றன. நாளை மறுதினம் வியாழக்கிழமை (22) 9000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் சரக்கு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

விவசாயக் காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபா – அமைச்சர் மஹிந்த அமரவீர

நிலையான எதிர்காலம் இலங்கையின் பிரதான குறிக்கோள்