உள்நாடு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெல்வார்: தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்கிறார் வஜிர

(UTV | கொழும்பு) –    அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் நெருங்கிய சகாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

மேலும் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும், இதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு நிச்சயம் தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நிச்சயம் நடக்கும். இதில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார்.

அவர் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் அல்லது பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவே நிச்சயம் வெற்றி பெறுவார்.

அவர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தியாகங்கள் செய்வோம் எனக் கூறிய அமைச்சர்களின் தியாகங்கள் எங்கே?

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்!

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்