உள்நாடு

தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை – திஸ்ஸ

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால், தேர்தலின்றி பதவிகளைப் பொறுப்பேற்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களிலும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், அவ்வாறு செயற்பட முடியாத சூழலே தற்போது காணப்படுகிறது. காரணம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பொதுஜன பெரமுனவினருடனேயே இணைந்து பயணித்துக்கொண்டிருக்கிறார்.

அவர்களே நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களாவர். அவ்வாறானவர்களுடன் இணைந்தால் அது ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பிய போராட்டக்காரர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அவ்வாறு வெற்றி பெற்றதன் பின்னர் ஜனாதிபதியுடனேயே இணைந்து பணியாற்ற நேரிடும்.

அதில் எவ்வித சிக்கலும் இல்லை. அது அரசியலமைப்பு ரீதியான விடயமாகும். அவ்வாறன்றி, தற்போது சென்று அமைச்சுப் பதவிகளை ஏற்று, அரசாங்கத்தின் பங்காளிகளாக நாம் விரும்பவில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், அது மக்கள் ஆணையல்ல. மக்கள் ஆணை அற்ற ஆட்சியாளர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும்?

பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்.  ஆனால், பொதுஜன பெரமுனவினர் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.  இவ்வாறான நெருக்கடிகளுடன் நாட்டு நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதை விட, பொதுத் தேர்தலுக்குச் செல்வது சிறந்ததாகும் என்றார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா; 416 ஆக உயர்வு [UPDATE]

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்!

ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் நிதி வழங்கி வைப்பு!