(UTV | கொழும்பு) –
காலிமுகத்திடல் போராட்டகாரா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ஜொன்ஸ்டன் பொ்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்டவா்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிா்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் சந்தேகநபா்கள் தொடா்பில் சட்டமா அதிபாின் ஆலோசனை பெறப்பட்டதாகவும், அந்த ஆலோசனையை சவாலுக்கு உட்பட்டுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
இது குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் தீா்ப்பு எதிா்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், இந்த வழக்கினை அதன் பின்னா் ஒரு நாளில் விசாரணைக்கு அழைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் கோாியுள்ளது. இதற்கமைய குறித்த முறைப்பாட்டை எதிா்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க நீதவான் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்போது சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட சமா்ப்பணங்களை ஏற்றுக்காண்ட நீதவான், சம்பவம் தொடா்பில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவிட்டாா்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්