உள்நாடு

32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

(UTV | கொழும்பு) –  32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி 32 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலக பிரிவில் 8.6 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கிரான் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

59 உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் இன்று கையளிக்கப்பட்டன.

இந்த காணிகளை 1991 ஆம் ஆண்டிலிருந்து இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுரவை வெல்லச்செய்வதற்கான போலி வேட்பாளராகவே ரணில் செயற்படுகிறார் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

திறமை வாய்ந்த கற்றறிந்த புத்திஜீவிகள் சமூகத்தை உருவாக்க 24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.

இந்தியாவிலிருந்து மேலும் 125 மாணவர்கள் நாடு திரும்பினர்