விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி

(UTV | கொழும்பு) –   ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போட்டியில் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 323 ஓட்டங்களை குவித்தது.

 

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

 

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் பரித் அஹமட் மாலிக் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 324 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 57 ஓட்டங்களையும் இப்ராஹிம் சத்ரான் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் துஷ்மந்த சமீர 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

50 விக்கெட்டுக்களை வீழ்த்தி பும்ரா சாதனை

ஹதுருசிங்கவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை -ஹரீன்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு