உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, சிங்கப்பூருக்கு விஜயம் செய்த பின்னர் ஜப்பான் சென்றிருந்தார்.

ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

அத்துடன், அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல வர்த்தக சந்திப்புகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இலங்கையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் பிரதிப் பிரதமர்களையும் சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘இரண்டாவது அலைக்கு காத்திருங்கள்’

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைது

டீசல் மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு ஒப்புதல்