உள்நாடுசூடான செய்திகள் 1

அலி சப்ரி ரஹீம் MP தங்கத்துடன் கைது!

(UTV | கொழும்பு) –

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

3.5 கிலோகிராம் தங்கத்துடன் அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், அவர் தற்போது சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் சற்றுமுன் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவிக்கையில், விமான நிலையத்தில் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளதுடன் எமக்கும் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினராவார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இந்திய கல்லூரி!

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு