சினிமா

 பிரபல நடிகர் சரத்பாபு உயிரிழந்தார்!

(UTV | கொழும்பு) –  பிரபல நடிகர் சரத்பாபு தனது 71 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார்.

70,80 ஆண்களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு, நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை வருகை தந்த பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன்!

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார்.

300 கோடி ரூபாயை வசூல் செய்த பதான் திரைப்படம்- கடுப்பாக்கினார் ரன்பீர் கபூர்