உள்நாடு

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பினாரா?

(UTV | கொழும்பு) –  பௌத்த, இந்து, இஸ்லாம் மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை நாடு திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து இன்று (22.05.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டாளர் அதிகாரியிடம் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பௌத்த, இந்து மற்றும் இஸ்லாம் மதங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட காரணத்தினால் போதகர் ஜெரோமுக்கு எதிராக சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்னதாக அவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நேற்றைய தினம் தான் நாடு திரும்பவுள்ளதாகவும், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள தனது மிரக்கள் டோம் வழிபாட்டு நிலையத்தில் விசேட ஆராதனை நிகழ்த்தப் போவதாகவும் அவர் முன்னதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.

எனினும் கடைசியாக மிரிஹானையில் உள்ள நிலையமொன்றில் நடைபெற்ற ஆராதனையில் அவர் காணொளி வாயிலாக கலந்து கொண்டிருந்தார்.  அதன்போது கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தான் முன்னர் தெரிவித்த கருத்துக் குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், ஆனால் அந்தக் கருத்தில் எதுவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தான் விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை நாடு திரும்பவும் இல்லை.அதே ​நேரம் அவர் நாடுதிரும்பும் பயண ஏற்பாடுகள் குறித்து மேலதிக தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்

பாராளுமன்ற அமர்வுகள் வியாழன், வெள்ளி

சாதாரண தர பரீட்சை முடிவுகள் வார இறுதிக்குள் வெளியாகும்