உள்நாடுசூடான செய்திகள் 1

 வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட்  அழைப்பு 

(UTV | கொழும்பு) –  வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட்  அழைப்பு 

பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி என்கிறது தேசியவாத முன்னணி!

வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளவும் தங்களது சொந்த தாயகத்தில் மீளக்குடியமரத் தயாராகுமாறு தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார்.

“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நாட்டில் நிலவும் சுமுக சூழலில், இலங்கையர் ஒவ்வொருவரதும் பூர்வீக வாழிடங்களில் வாழும் உரித்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தேசியவாத முன்னணி இவ்விடயத்தில் உறுதியுடனுள்ளது. பயங்கரவாதத்தின் இனச் சுத்திகரிப்பை ஜனநாயக அரசாங்கம் ஏற்கப்போவதில்லை. எனவே, வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை பூர்வீக வாழிடங்களில் மீளக் குடியமர்த்தும் செயற்பாடுகளில் தேசியவாத முன்னணி ஈடுபட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவதனூடாகவே இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த இயலும். சிவில் சமூகத்தை வெளியேற்றிய பயங்கரவாத சிந்தனையை தோற்கடிக்க, பூர்வீக பூமிகளில் மக்களை குடியேற்றுவதே பொருத்தமானது. இப் பொறுப்பிலிருந்து ஒருபோதும் தமது அணி விலகிச் செயற்படப் போவதில்லை” என்று அதன் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷாபியின் சொத்து விவகாரம் : சி.ஐ.டி. குழு விசாரணை ஆரம்பம்

சவூதி அரேபியா செல்லும் அலி சப்ரி!

களுத்துறை மஹ ஹீனடியங்கல சுகாதார மத்திய நிலையத்திற்கு இருக்கைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்…