உள்நாடுகல்வி

 கருத்தரங்குகளுக்கு தடை

(UTV | கொழும்பு) –  கருத்தரங்குகளுக்கு தடை

எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையை எதிர் நோக்கவுள்ள மாணவர்களுக்கு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள்,கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாணவ பிக்குகளுக்கு பாலியல் வன்கொடுமை பொலிஸில் முறைப்பாடு

இரவு நேரப் பயணத்தடை : புதிய அறிவிப்பு

குழந்தை வளர்ப்பு குறித்து விசேட வகுப்பு – சுகாதார அமைச்சு.