(UTV | கொழும்பு) – கொழும்பில் அதிக இராணுவர்கள் குவிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன ? வெளியானது உண்மை
கொழும்பில் அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய சில தினங்களாக கொழும்பின் பல்வேறு இடங்களிலும் அசாதாரண எண்ணிக்கையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்க உள்ளதாகவும் இதன்போது கலகங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தவும் இராணுவம் குவிக்கப்பட்டதாக சிலர் குறிப்பிட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பாரியளவில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் குவிக்கப்பட்டதாக மற்றுமொரு தரப்பினர் கூறியிருந்தனர்.
எனினும், ஒத்திகை நடவடிக்கைகளுக்காக இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான படையினர் குவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்புப் பேரவை இன்று சந்திக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්