வகைப்படுத்தப்படாத

இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் – நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி

(UTV | கொழும்பு) –  இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் – நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி

நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றமையை தடுக்க நாட்டில் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா என கேட்கப்பட்டமைக்கு பதில் அளித்த அவர்,

தான் குவைத்தில் வளர்ந்த பெண் என்பதனால் அங்கு பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு தொடர்பில் தானும் தனது தாயும் நன்கு அறிந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் 200 % வீதம் நிரூபிக்கப்பட்டால் அரபு நாடுகளில் போன்று இதுபோன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

போதை பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதாக அதிகாரத்திற்கு வந்த மைத்திரிபால சிரிசேன கடைசியில் மரண தண்டனை கைதியை விடுதலை செய்துவிட்டு வீடு சென்றார் என அவர் குறிப்பிட்டார்.

யூ டியூப் செனல் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பாராட்டு

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இந்த வாரம் நடவடிக்கை