(UTV | கொழும்பு) – 🔴 ஆளுனர்கள் விரைவில் ராஜினாமா……!! கோட்டாவின் தலையீட்டை அடுத்து தீர்மானத்தில் மாற்றம்.
⚪ எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் மாகாண ஆளுநர்கள் சிலர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளுநர்களுடன் தொலைபேசிஅழைப்பு மூலம் உரையாடியதை அடுத்து அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக ஆளுனர்கள் ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் எவரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் ஆலோசனையின் பேரில் , தம்மை பதவி விலக்க பதில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் , அவ்வாறு செய்தால் வழக்குத் தொடரவுள்ளதாகவும் சில ஆளுனர்கள் தெரிவித்திருந்தனர்
அதனடிப்படையில் ஆளுநர்கள் எவரும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கவில்லை.
எனினும் நேற்றைய தினம் கோட்டாபய ராஜபக்ஷ வுக்கும் ஆளுனர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை அடுத்து பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் நான்கு ஆளுனர்களும் இரண்டொரு நாட்களுக்குள் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதில் ⚪ அனுராதா யஹம்பத் வௌிநாடு ஒன்றுக்கான தூதுவராக விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්