(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !
எதிர்கட்சியாக, அரச தரப்பிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினாலும், முற்போக்கு அரசியல் கட்டமைப்பில் சாதகமான நல்லவை நடக்கும் போது, அதைப் பாராட்டாமல் இருக்க முடியாது எனவும், நல்லதை நல்லது எனக் கூறி பாராட்ட இயலுமை இருக்க வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கையை அதிலிருந்து மீட்கும் பணியில், நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்தால் அது பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளின் ஆளுகை ஏற்கப்படுவதாவும், இதில் அதிகாரம் பகிரப்படுவதாக இருக்க வேண்டும் என்றும், இம்மூன்று நிறுவனங்களுக்கு இடையே தடைகளும் சமன்பாடுகளும் இருப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் 530 இளைஞர்கள் பங்கேற்பது இந்த தடைகள் மற்றும் சமன்பாட்டுச் செயல்முறையை முறையாகச் செயல்படுத்துவதற்கே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று எமது நாடு முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது உலக தரவரிசையில் ஜனநாயக செயற்பாடுகளை ஆதரிக்கும் வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கும் தப்படுத்தலில் முதலாம் இட செயற்பாடு என இதை அழைக்கலாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இளைஞர்கள் பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தியதாகவும், அந்த விரும்பத்தகாத கடந்த காலத்தை நினைவில் கொள்ளாவிட்டாலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த அவர், 2023 இல் தற்போது பேசப்படும் இவ்விடயம் 1990 ஆம் ஆண்டு இளைஞர் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஒன்றாகும் எனவும், அந்த பரிந்துரைகளில் ஒன்றையேனும் தற்போது நடைமுறைப்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாகவும் ,
கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகள் என நாம் வெவ்வேறு பக்கங்களில் இருந்தாலும் நாட்டின் பொதுக் கடமைக்காக ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், நாட்டுக்கு பெறுமானம் சேர்ப்பதானதே தவிர இது பட்டம் பதவிகளை பகிர்ந்து கொள்வதற்காக அல்ல எனவும், இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த உகந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கான பரிச்சயப்படுத்தல் செயலமர்வில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්