உள்நாடு

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது மோதல்!

(UTV | கொழும்பு) –  இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வரான இம்மானுவல் ஆர்னோல்ட்டின் வீட்டிற்கு இன்று காலை பொலிஸார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், வவுனியாவில் நடக்கும் கட்சி செயற்குழு கூட்டத்தில் தான் கலந்துகொண்டுள்ளதால் நாளை காலை 10 மணிக்கு பொலிஸ் நிலையத்திற்கு வருவதாக இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்துள்ளது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.இதன்போது, தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனை செயற்பாட்டாளருமான ஜெயமாறன் என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ceyLonSr

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்

MV X-PRESS PEARL கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் கைது