உள்நாடு

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

(UTV EDITOR| கொழும்பு) –

கம்பளை, வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.இவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (12) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்ததில், அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருவது தெரிய வந்தது. ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, குறித்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். அவர் மறுத்ததால், சந்தேக நபர் அவளை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார். மேலும், அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகவும், கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாகவும், ஆனால் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு திடீரென பொலிஸார் விரைந்துள்ளனர். Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாரின் இந்த செயற்பாடு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. VIDEO/ CCTV VIDEO HERE

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாதின் கைது தொடர்பில் ஆராய அரசியல் தலைமைகள் கூடுகின்றனர்

தபால் மூல வாக்குப்பதிவு அடுத்த வாரம்

கணவனால் தாக்கப்பட்டு வரும் பெண்கள் வைத்தியர்களிடம் கணவனை காட்டிக்கொடுப்பதில்லை