உள்நாடு

முதல் ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில்….

(UTV | கொழும்பு) –  முதல் ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில்….

நாட்டின் முதல் ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை இலங்கையிலுள்ள விவசாய நிறுவனத்தால் பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது.

பண்டாரவளை கஹட்டேவெல பிரதேசத்தில் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை கஹட்டவெல பண்ணை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இத்தொழிற்சாலையை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் பார்வையிட்டார். கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தாலும் மின்சாரம் இல்லாததால் உற்பத்தியை தொடங்க முடியவில்லை.

உருளைக்கிழங்கு சிப்ஸ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், இலங்கைக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 21 பில்லியன் ரூபாவாகும்.

தற்போது இலங்கையில் உருளைக்கிழங்கு சிப்ஸின் தேவை 11 வீதத்தால் அதிகரித்துள்ளது. மாலத்தீவு, கனடா, ஐக்கிய இராச்சியம், லக்சம்பேர்க் மற்றும் தென் கொரியாவில் இருந்தும் இலங்கையில் இருந்து உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு பெரும் தேவை உள்ளது.

தற்போது வெலிமடை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய இடங்களில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பிரதான மூலப்பொருளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வசதியினால் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையை பண்டாரவளை கஹட்டேவெல பிரதேசத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உருளைக்கிழங்கு பயிரிடும் 180 விவசாய குடும்பங்கள் தமது அறுவடைகளை இத்தொழிற்சாலையில் விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம் அனுமதி

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது