உள்நாடு

அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிக்க புதிய முறை

(UTV | கொழும்பு) –  அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிக்க புதிய முறை

இனிவரும் களங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாய நிலைகளை மக்களுக்கு அறிவிப்பதற்காக நவீன தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மைய நிலநடுக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அதன் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, இந்த நாட்களில் அதிக வெப்பத்தை எதிர்கொள்ள வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசியப் பட்டியல் விவகாரம் – ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு பாதுகாப்பு

editor

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்

சம்பள உயர்வு: உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவதை நிறுத்தவும்