உள்நாடு

 07 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்

(UTV | கொழும்பு) –  07 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்

இடமாற்றம் செய்யப்பட்ட ஏழு பிரதி பொலிஸ் அதிபர்களில் இருவர் தமது இடமாற்றங்களுக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர்களான அஜித் ரோஹண, மற்றும் பிரியந்த வீரசூரிய ஆகியோரே தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் சந்திரா பெர்ணான்டோவுக்கு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார்கள்.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் நியாயமற்ற இடமாற்றங்களை அங்கீகரிக்க வேண்டாம் என்று அவர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் சந்திரா பெர்னாண்டோவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமது இடமாற்றம் தொடர்பான பரிந்துரைகளுக்கு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

தமது இடமாற்றங்களுக்கு உரிய காரணங்கள் கூறப்பட்டிருக்கவில்லை என்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக அஜித் ரோஹண தென் மாகாணத்திற்கு பொறுப்பான பதவியில் இருந்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் அதிபராக மாற்றப்பட்டார். மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லலித் பத்திநாயக்க பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் இருந்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் எல்.கே.டபிள்யூ.கே. சில்வா பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சஜீவ மெதவத்த சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு ஆகியோரும் இடமாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திறைசேரிக்கு 07 பில்லியன் ரூபா!

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டணபட்டியலுக்கும் அங்கீகாரம்!